நோக்கு

இலங்கை பிராந்தியத்திற்குள்ளே முதல்தர மக்கள் மையமாகக் கொண்ட போக்குவரத்து அமைப்புமுறையுடைய நாடாக உருவாகுதல்.

செயற்பணி

"மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்ப அணுகுமுறைகள் கையாளப்பட்ட மிகவும் உயர்ந்த போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிலைநாட்டுதல்"

விடய எல்லை

பயணிகள் மற்றும் பண்டங்களை ஏற்றிச்செல்லல், சுற்றுலாப் பயணிகளுக்குரிய வசதிகள், தொடர்புடைய உட்டகட்டமைப்பு வசதிகள், சேவைத் தரவளவுகள், வீதி இடநெருக்கடிகள் மற்றும் விபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளும் முழுமொத்தப் போக்குவரத்துச் சேவையை பொதுவானதொரு நேரசூசிகைக்கு அமைய செயற்படும் மக்களின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படும் போக்குவரத்துச் சேவையினைப் பேணுதல், தாபனக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரப்பாதைகளை அடிப்படையாகக் கொண்ட சூழல்நேய அத்துடன் மக்கள்நேய போக்குவரத்துத் தொகுதியொன்றைத் தாபித்தல்.

கடமைகளும் பணிகளும்

அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படுகின்ற தேசிய கொள்கைகளின் அடிப்படையில்; நிறுவப்பட்ட 'வினைத்திறன்மிக்க அத்துடன் சூழல்நேய பொதுப் போக்குவரத்து முறைமையொன்றுக்காக போக்குவரத்து வலையமைப்பினை அபிவிருத்தி செய்வதற்காக' விதித்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக போக்குவரத்து விடயத்துக்குரிய கொள்கை தி;ட்டமிடல், தேசிய வரவு செலவுத்தி;ட்டம், அரச முதலீடுகள் மற்றும்; தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்தி;ட்டத்தின் கீழுள்ள கருத்திட்டங்களைச் செயற்படுத்துதல், அமைச்சின் விடயபரப்பிற்குட்படும் பொதுமக்கள் சேவைகள் வினைத்திறன் வாய்ந்த முறையிலும் மற்றும் மக்கள் நட்புறவு வாய்ந்த விதத்திலும் வழங்குதல,; வீண் விரயம் மற்றும் ஊழலைத் தவிர்த்தல், அமைச்சின் கடமைப்பாங்கினை நிறைவேற்றுவதனை உறுதிப்படுத்துவதற்கு உதவியாக அமைகின்ற விதத்தில் நவீன முகாமைத்துவ முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து முறைகள் மற்றும் நடைமுறைகளைச் சீர்திருத்துதல் மற்றும் கீழே குறிப்பிட்டுள்ள திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் விடயங்கள் மற்றும் பணிகளுடனும் அவ்விடயங்களுக்குரிய கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்தல், செயற்படுத்தல், பின்தொடர்தல் மற்றும் மதிபாய்வு நடவடிக்கை ஆகியன முதலியவைகளாகும்.

அதிவிசேட முன்னுரிமைகள்

  • பாதுகாப்பானதும் நம்பகத்தகுந்ததுமான பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்குதல்
  • சூழல் நேயமிக்க போக்குவரத்து முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்
  • வாகன நெரிசல்களைக் குறைப்பதற்காக வாகனத் தரிப்பிடங்களை நிறுவுதல்
  • தனியார் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தல்
  • பேருந்துகள்; உற்பத்தி மற்றும் போக்குவரத்துது துறைக்குரிய உள்ள10ர் கைத்தொழில் முறைமையொன்றினைக் கட்டியமைத்தல்.
  • புதிய புகையிரதப் பாதைகளை நிர்மாணித்தல், இருக்கின்ற புகையிரதப் பாதைகளை விரிவாக்குதலும் அதற்குரிய காணிகளை கையகப்படுத்துதலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும்
  • துறைமுகங்களுக்குப் புகையிரதம் மூலம் பண்டங்களை ஏற்றிச்செல்லும் வசதிகளை ஏற்படுத்துதலும் விஸ்தரித்தலும்
  • மோட்டார் வாகனங்களின் பதிவும், அனுமதிப்பத்திரம் வழங்கலும்
  • சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல்
  • மோட்டார் வாகனங்களுக்கு உரிய சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டி நெறிகளை வழங்குதலும் ஒழுங்குபடுத்தலும்;.
  • பச்சைவீட்டு காற்று வெளியேற்றப்படுதலைக் குறைப்பதற்காக போக்குவரத்துத் துறை பங்களிக்கக்கூடிய வகையில் உபாயமுறையிலான நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துதல்.