கருத்திட்டத்தின் பெயர்
மாத்தறை மற்றும் பெலிஅத்தை வரையிலான வீதி கட்டுமானம்
அறிமுகம்
மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான புகையிரத வீதி நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் அதன் முதல் கட்டமாக மாத்தறை முதல் பெலிஅத்தை வரையிலான புகையிரத வீதி நிர்மாணிக்கப்படும். 2013.08.01 ஆந் திகதி கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் தூரம் 26.75 கி.மீ. ஆக இருப்பதுடன் அக்குறித்த பாதை நிர்மாணப் பணிகள் கட்டுமான கம்பனியொன்றினால் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் மதிப்பிடப்பட்ட செலவு 278.2 அமெரிக்கா டொலர்களாகும். இந்த கருத்திட்டத்தின் கீழ்
- 03 பிரதான பாலங்கள் மற்றும் ஏனைய 09 பாலங்கள்
- 02 இரு சுரங்கப் பாதைகள்
- 05 புகையிரத நிலையங்கள்
- 21 புகையிரத பாதை சந்திக்கடவுகள்
நிர்மாணிக்கப்படும்.
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- தென் மாகாணத்துக்குள் புகையிரத போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்.
- அக்குறித்த மாகாணத்துக்குள் பொருளாதரா அபிவிருத்தி நடவடிக்கைகள் மேம்படுத்துதல்
- புகையிரத வருமானங்களை மேம்படுத்துதல்
- சுற்றுச்சூழல் நட்புறவான போக்குவரத்துச் சேவை
முன்னேற்றம்
- பௌதீக வளர்ச்சி - 52.9%
- நிதியியல் வளர்ச்சி - 51.2%