Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Ministry of Transport

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு கருத்திட்டங்கள் இலங்கை புகையிரத சேவைகள் நடைபெறும் கருத்திட்டங்கள்

நடைமுறையிலுள்ள கருத்திட்டங்கள்

கருத்திட்ட தலைப்பு

கிழக்குப் புகையிரதப்பாதைக்கான இரயில் – பஸ்களை அறிமுகப்படுத்துதல்

அறிமுகம்

கிழக்குப் புகையிரதப்பாதையின் மட்டக்களப்பு, பொலனறுவை, கல்ஓயா சந்தி, திருகோணமலைக்கான  இரயில் பஸ் போக்குவரத்து சேவையை இலங்கை புகையிரதச் சேவை இயக்கிக்கொண்டிருக்கின்றது.

அனுகூலங்கள்

  • கிழக்கு மாகாணத்தில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கின்றது.
  • கிழக்குப் புகையிரதப்பாதையில் வினைத்திறனானதும் துரிதமானதுமான சேவையை வழங்குதல்.
  • உள்நாட்டு விவசாயத்துறையில் தொழிலாளர்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தல்.
  • இப்பகுதியில் வறுமையை இழிவாக்குதல்.

கருத்திட்ட தலைப்பு

மாத்தறை – கதிர்காமம் புகையிரதப்பாதையை நிர்மாணித்தல்

அறிமுகம்

இச்செயற்திட்டமானது மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையான கரையோரப் புகையிரதப்பாதை வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இப்புகையிரதப்பாதையின் நிர்மாணப்பணிகளை 3 கட்டங்களாக பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கட்டம் 1 : மாத்தறை – பெலியத்தை (27 km)
கட்டம் 2 : பெலியத்தை – அம்பாந்தோட்டை (48 km)
கட்டம் 3 : அம்பாந்தோட்டை – கதிர்காமம் (39.5 km)

அனுகூலங்கள்

  • அம்பாந்தோட்டை துறைமுகம், விமானநிலையம், கொழும்பு ஆகியவற்றுக்கு இடையிலான போக்குவரத்தை விருத்தி செய்தல்.
  • புகையிரத சேவையை விஸ்தரிப்பதன் மூலம் அம்பாந்தோட்டை பகுதியின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல்.
  • வீதி, புகையிரத போக்குவரத்துக்கு இடையிலான போட்டியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் வினைத்திறனானதும் சிக்கனமானதுமான போக்குவரத்து சேவையை வழங்குதல்.
Completed Bridge across “Nilvala Ganga”

மதிப்பிட்ட கிரயம்

363.00 மில்லியன் அமேரிக்க டொலர்கள்

கருத்திட்ட தலைப்பு

வடக்குப் புகையிரதப் பாதையை நிர்மாணித்தல்

அறிமுகம்

வடக்குப் புகையிரதப் பாதையை நிர்மாணித்தலானது ‘உத்துறு மித்துறு’ திட்டத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டமானது தண்டவாளங்களை மீள அமைத்தல், பாலங்களை புனரமைத்தல் அல்லது மீள்நிர்மாணித்தல், புகையிரத நிலையங்களை மீளமைத்தல், புதிய சமிக்ஞை தொடர்பாடல் முறையை அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மேற்கூறப்பட்ட ஒவொரு செயற்பாடுகளும் நிர்வகிக்கக்கூடிய சிறிய செயற்பாடுகளாக பிரிக்கப்பட்டு அவை நாட்டுப்பற்றுடைய தனிமனிதனுக்கோ, குழுக்களுக்கோ, நிறுவனங்களுக்கோ அல்லது கம்பனிகளுக்கோ தனியாகவோ கூட்டாகவோ வழங்கப்படும். இச் செயற்பாடுகளில் பங்கெடுத்துக்கொள்ளலானது பல வழிகளில் விரிவாக்கப்படலாம். அதாவது சிறிய அளவிலான கண்காணிப்பு தொடக்கம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாடுகளை கூட்டாக நிர்மாணித்தல். இக்கருத்தானது ஏலவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்சமயம் வடக்குப் புகையிரதப் பாதையில் தாண்டிக்குளம் வரையான புகையிரதச் சேவை நடைபெறுகின்றது. புகையிரதத் திணைக்களத்தால் தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரதப் பாதையானது நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரதப் பாதையின் நிர்மாண வேலையானது 2 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. ஓமந்தை – பளை வரையும் (96 km)   - புகையிரதப் பாதையின் நிர்மாண வேலைகள் இந்தியக்கம்பனியால் மேற்கொள்ளப்படும்.
  2. பளை - காங்கேசன்துறை வரையும் (56 km) - புகையிரதப் பாதையின் நிர்மாண வேலைகள் சீனக்கம்பனியால் மேற்கொள்ளப்படும்.

அனுகூலங்கள்

  • வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் பாலமமைத்தல்.
  • வடக்கில் வசதிகளை உயர்த்துவதன் மூலம் பொருளாதார சமூக முன்னேற்றத்தில் பங்கெடுத்தல்.
  • வடக்கிலிருந்தும் வடக்குக்கும் பயணம் செய்வோருக்கான வினைத்திறனானதும் துரிதமானதுமான போக்குவரத்து சேவையை வழங்குதல்.
  • இலங்கை புகையிரத சேவையின் வருமானத்தை அதிகரித்தல்.

மதிப்பிட்ட கிரயம்

புகையிரதப் பாதையின் நிர்மாண வேலை

ஓமந்தை – பளை 185,346,708 அமேரிக்க டொலர்கள்
பளை - காங்கேசன்துறை 245,041,184 அமேரிக்க டொலர்கள்

கருத்திட்ட தலைப்பு

கரையோரப் புகையிரதப் பாதையை அமைத்தல்

அறிமுகம்

மணிக்கு 100 km வேகத்தில் ஓடுவதற்குரிய கரையோரப் புகையிரதப் பாதையை அமைத்தலுக்குரிய திட்டமாகும். இது 2 கட்டங்களாக அமுல்படுத்தப்படுகின்றது.

கட்டம் ஒன்றின் பிரதான செயற்பாடுகளாவன;-

  1. கொழும்பிலிருந்து களுத்துறைக்கும் காலியிலிருந்து மாத்தறைக்குமான புகையிரதப் பாதையை புனரமைத்தலுக்கான பொருட்களை வழங்குதல்.
  2. காலியிலிருந்து மாத்தறைக்கான புகையிரதப் பாதையை புனரமைத்தல்.
  3. வலுவேகத் தொகுதியை நிர்வகிப்பதற்கான பொறி, இயந்திரத் தொகுதியை வழங்குதல்.
  4. தற்போது பாவனையிலுள்ள M8 வகை எஞ்சின்களுக்கும் மனிதவள அபிவிருத்திக்குமாக 15 வலுவேகத் தொகுதிகள், 3 எஞ்சின்கள் மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்தல்.
  5. கொழும்பிலிருந்து களுத்துறைக்கான புகையிரதப் பாதையின் புனர்நிர்மாணம் இலங்கை புகையிரத சேவையினால் முன்னெடுத்துச் செல்லப்படும்.

5 வலுவேகத் தொகுதியின் கொள்வனவும், களுத்துறையிலிருந்து காலி வரையான புகையிரதப் பாதையின் புனர்நிர்மாணத்துக்கான வேலையை நிறைவேற்றுதலும் அதற்கான பொருட்களை வழங்கலும் கட்டம் இரண்டின் பிரதான செயற்பாடுகளாகும்.

அனுகூலங்கள்

  • மணிக்கு 100 km எனும் அதியுயர் வேகத்தில் செல்வதற்கான வினைத்திறனான சேவையை வழங்குதல்.
  • புகையிரதப் பாதையை தரமுயர்த்துவதன் மூலம் பயணிகளினதும் பொருட்களினதும் போக்குவரத்துத் தொகையை அதிகரித்து அதன் மூலம் வருமானத்தை பெருக்குதல்.
  • குறைந்த செலவில் பொருட்களை கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் ஊக்குவித்தல்.
  • நெடுந்தூரப் பயணத்திற்கான வசதிகளுடன் கூடிய தரமுயர்ந்த வினைத்திறனான சேவையை வழங்குதல்.
  • வெளிநாட்டில் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதன் மூலமாகவும், இந்தியன் புகையிரத சேவை அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாகவும் ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.

மதிப்பிட்ட கிரயம்

இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 212.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இத்தொகையில் 167.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டத்தின் முதற்கட்டத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கடன் திட்டத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மிகுதியாக உள்ள 67.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகையானது இந்திய அரசாங்கத்தால் எதிர்காலத்தில் வழங்கப்படும். மிகுதித் தொகையான 45 மில்லியன் அமெரிக்க டொலரானது இலங்கை அரசாங்கத்தால் முதலீடு செய்யப்படும்.

 

Name (required)
E-mail (required, but will not display)
Country
Title
Comment
Notify me of follow-up comments
Security code
Refresh

சமீப செய்திகள்